கொழும்பு மாநகரசபை உறுப்பினராக ரதினி பிரதீப்குமாருக்கு கட்சி தலைவர் மனோ கணேசன் எம்பி நியமனம்.
திருமதி ரதினி பிரதீப்குமார், கொழும்பு மாநகரசபையின் ஜனநாயக மக்கள் முன்னணியின் (DPF) உறுப்பினராக கட்சியால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது நியமனம் தொடர்பான உறுதியுரையை கட்சி தலைவர் மனோ கணேசன் எம்பியிடம் வழங்கி, நியமனத்தை பெற்றுக்கொண்டார்.
தொழில்ரீதியாக தமிழ் மொழி, இந்து சமயம், சிங்கள-ஆங்கில இணைப்பு மொழி பாட ஆசிரியரும் ஆங்கில பட்டய (diploma) தகைமையாளருமான, ரதினி பிரதீப்குமார், கொழும்பு மாநகரசபையில் ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர் வரிசையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வண்ணம் நியமனம் பெற்றுள்ளார்.
கொழும்பு மாநகரசபையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பாக பத்து உறுப்பினர்கள் பணியாற்றுகின்றார்கள்.