யானைக்காக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி வயோதிபர் மரணம்!

யானைக்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் மின்சாரம் தாக்கியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
69 வயதுடைய நபரே இதன்போது உயிரிழந்துள்ளார்.