யாழில் பல பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை மின்சார தடை
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை( 23) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, யாழ்.போதனா வைத்தியசாலை, யாழ். போதனா வைத்தியசாலையின் மூன்று மாடிக் கட்டடத் தொகுதி, கொமர்சல் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை வங்கி, ரில்கோ விடுதி, சுகாதார சேவை நிலையம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆண்கள் விடுதி, ஆஸ்பத்திரி வீதியில் வேம்படிச் சந்தியிலிருந்து கஸ்தூரியார் வீதிச் சந்தி வரை, மகாத்மா வீதி, முனீஸ்வரன் வீதி, கந்தப்பசேகரம் வீதி, யாழ்ப்பாணம் கார்கில்ஸ் பி.எல். சி, அபி கட்டடம், யாழ். ஹோட்டல் பிறைவேற் லிமிற்ரெட், யாழ். மதர் கெயார் பிறைவேற் லிமிற்ரெட், பொம்மைவெளி, நாவாந்துறை, முத்தமிழ் வீதி, மீனாட்சிபுரம், பண்ணை சுற்றுவட்ட வீதி, கண்ணகிபுரம், பண்ணை சுகாதாரக் கிராமம், யாழ். சிறைச்சாலை, யாழ். பொலிஸ் நிலையம், யாழ். துரையப்பா விளையாட்டரங்கு, யாழ். கோட்டைப் பிரதேசம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய தினமும்(22) யாழின் பல பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.