சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாபய கைது செய்யப்படுவாரா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்யுமாறு கோரி சர்வதேச அமைப்பு ஒன்று சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
2009 உள்நாட்டுப் போரின் போது நாட்டின் பாதுகாப்புத் தலைவராக இருந்தபோது கோட்டாபய ராஜபக்ச ஜெனிவா உடன்படிக்கைகளை கடுமையாக மீறியதாக ‘The International Truth and Justice Project’ (ITJP) என்ற அமைப்பு சம்பந்தப்பட்ட புகாரில் குறிப்பிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட புகாரின் நகலில் உள்ள உண்மைகளை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை இதனைத் தெரிவித்துள்ளது.
மேலும் உலகளாவிய அதிகார வரம்பின் அடிப்படையில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ITJP, சிங்கப்பூரில் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படலாம் என்று வாதிட்டது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜூலை 13 அதிகாலை மாலைத்தீவுக்கு தப்பிச் சென்று பின்னர் சிங்கப்பூர் சென்றார்.