சீனாவுக்குச் செல்ல ரணில் திட்டம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீனாவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார் என்று சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கொஹொன1a தெரிவித்துள்ளார்.
வர்த்தகம் முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட விடயங்களில் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக அவர் சீனாவுக்கு விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளார் .
மேலும் கொழும்பிலும், அம்பாந்தோட்டையிலும் சீனாவின் ஆதரவுடன் கூடிய பரந்த துறைமுகத் திட்டங்களுக்கு மேலதிக முதலீட்டை மேற்கொள்வதன் மூலம் பீய்ஜிங், இலங்கைக்கு உதவ முடியும் என்றும் தூதுவர் பாலித கொஹொன குறிப்பிட்டுள்ளார் .
இதேவேளை, சீனா தொடர்பில், புதிய அரசின் கொள்கையில் எந்த அடிப்படை மாற்றமும் ஏற்படாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.