மக்கள் ஆணை முடிந்தது , பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் – மஹிந்த தேசப்பிரிய
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் மக்கள் வழங்கிய ஆணை தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எனவே, புதிய ஆணைக்கு வழி வகுக்கும் வகையில் கூடிய விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயகத்தை நிலைநாட்டும் நோக்கில் தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கான செலவை ஏற்க நிறுவனங்கள் இருப்பதாகவும் அதற்கு ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளை உதாரணமாகச் சுட்டிக்காட்ட முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் குறிப்பிடுகின்றார்.
எந்தவொரு கொடுப்பனவும் பெறாமல் தேர்தல் கடமைகளில் ஈடுபடத் தயார் என அரச அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தேர்தலை நடத்துவது பெரிய பிரச்சினையாக இருக்காது என மஹிந்த தேசப்பிரிய குறிப்பிடுகின்றார்.