ரணில் அரசின் இடைக்கால ‘பட்ஜட்’ அடுத்த மாதம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் இடைக்கால வரவு – செலவுத் திட்டம் அடுத்த மாதத்துக்குள் முன்வைக்கப்படவுள்ளது.
இந்தத் தகவலை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.