கிளிநொச்சி மாவட்டத்தில் எரிபொருள் விநியோக நடைமுறை தொடர்பான விளக்கம்!
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு அதற்கென மாவட்டச் செயலகத்தினால் வழங்கப்பட்ட எரிபொருள் விநியோக அட்டை மற்றும் தேசிய அளவில் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள QR CODE ஆகிய இரண்டையும் சமர்ப்பிக்கவேண்டும். QR CODE முறைமை அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் வெற்றிகரமாகச் செயற்படத் தொடங்கும் வரையில் எரிபொருள் விநியோக அட்டைப் பயன்பாடு கட்டாயமானது என மாவட்டச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுவரை எரிபொருள் விநியோக அட்டையைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் தங்கள் பகுதி கிராமசேவையாளர்கள் ஊடாக உடனடியாக அதனைப் பெற்றுக்கொள்ளவேண்டும். அதேபோல், QR CODE பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவோர், பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகத்தில் இதற்கென இயங்கும் விசேட கரும பீடங்கள் மூலம் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
எரிபொருள் பங்கீட்டு அட்டை
விவசாயிகள்(பச்சை), கடற்றொழிலாளர்(நீலம்), வாடகை வாகனம்(மஞ்சள்), பாரவூர்தி(செம்மஞ்சள்)), டிசப்பர்(ஊதா), அத்தியாவசிய,அரச சேவை உத்தியோகத்தர்(சிவப்பு), பொதுமக்கள்(வெள்ளை) என, ஒவ்வொரு துறை சார்ந்தவர்களுக்கும் என தனித்தனியே எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கான விநியோக அட்டைகள் மாவட்டச் செயலகத்தால் தயாரிக்கப்பட்டு, பிரதேச செயலாளர்கள், கிராமசேவை உத்தியோகத்தர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்த விநியோக அட்டைகளைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் தங்கள் பகுதி கிராமசேவையாளர் ஊடாக அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.
QR CODE
அரசாங்கத்தினால் தேசிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த முறைமை, அரசாங்கத்தின் அறிவிப்பின் பிரகாரம் தெரிவுசெய்யப்பட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இதுவரையில் பரீட்சிக்கப்பட்டு வெற்றியளித்துள்ளது. ஏனைய எரிபொருள் நிலையங்களிலும் இதனைச் செயற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை இதனைச் செய்துகொள்ளாதவர்கள் தங்கள் பகுதி பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட கருமபீடங்களின் ஊடாக இதனைச் செயற்படுத்திக்கொள்ள முடியும்.
இரண்டும் அவசியம்
QR CODE முறைமை முழு அளவில் செயற்பாட்டுக்கு வரும் வரையில், இரட்டை விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் விநியோக அட்டை, QR CODE இரண்டையும் சமர்ப்பித்தே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.
விநியோக நடைமுறை
147,271க்கு மேற்பட்ட சனத்தொகையைக் கொண்ட, 1,279 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 10 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு ஊடாகவே எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்மைய காலம் வரையில் கிளிநொச்சி மாவட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் கிடைக்கப்பெற்றிருக்கவில்லை.
ஜுன் மாத முற்பகுதியில் கிளிநொச்சி நகரிலுள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கிடைக்கப்பெற்ற பெற்றோல் அத்தியாவசிய சேவை என்ற அடிப்படையில் சுகாதாரதுறையினருக்கு முன்னுரிமை அடிப்படையிலும், மேலதிமாக கல்வித்துறை சார்ந்தோர் மற்றும் அரச பொதுமக்களில் ஒரு பிரிவினருக்கும் வழங்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் இரண்டு தடவைகள் சுகாதாரத்துறையினருக்கான விசேட ஒதுக்கீடாகவே மாவட்டத்துக்குப் பெற்றோல் கிடைக்கப்பெற்றிருந்தது. இருந்தும், சுகாதாத்துறையினருடன் கலந்துரையாடி, கிராமசேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவை கள உத்தியோகத்தர்களுக்கும் ஒரு பகுதி பெற்றோல் வழங்கப்பட்டது.
இதுவிர, நெற்செய்கையாளர்கள் அறுடைக்கென முன்கூ ட்டியே கோரியிருந்த டீசல் படிப்படியாக அவர்களுக்கு உரிய முறையில் பெற்றுக்கொடுக்கப்பட்டு வருவதுடன், சுகாதாரத்துறை உள்ளிட்ட ஏனைய சில அத்தியாவசியசேவை நிறுவனங்களுக்கு இருப்பைப் பொறுத்து டீசல் விநியோகம் மாவட்டச் செயலகத்தினால் வழங்கப்பட்டு வருகிறது.
பெற்றோல் விநியோகம் பெருமளவு தடைப்பட்டிருந்த காலத்தில் Lanka IOC நிரப்பு நிலையங்கள் ஊடாக நாடளாவிய ரீதியில் பெற்றோல் விநியோகம் இடம்பெற்றபோதும், கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த நிறுவனத்தின் கிளைகளோ, முகவர்களோ இல்லாத காரணத்தினால் இங்கே அந்த விநியோகத்தைப் பெற்றுக்கொடுக்க முடிந்திருக்கவில்லை.
நீண்ட இடைவெளியின் பின்னர் இப்போதுதான் தெரிவுசெய்யப்பட்ட எரிபொருள் நிலையங்கள் ஊடாக மீண்டும் பெற்றோல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலம் பெற்றோல் பெற்றுக்கொள்ளாது இருந்துவந்த கிளிநொச்சி மாவட்ட மக்கள் இதனால் பெற்றோலைப் பெற்றுக்கொள்வதற்காக பெருமளவில் முண்டி யடிக்கும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
இருந்தாலும், பொதுமக்களது நலன்களைக் கருத்தில் கொண்டு மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எரிபொருள் கிடைக்கப்பெற்ற ஒவ்வொரு நிரப்பு நிலையங்களிலும் நேரடியாக நின்று பொதுமக்களுக்கு உரிய முறையில் பெற்றோல் விநியோகம் நடைபெறுவதற்கு பாடுபட்டு வருகின்றனர்.
எரிபொருள் கிடைக்கப்பெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ள நிரப்பு நிலையங்களுக்கு பெரும்பாலும் மாலை நேரங்களிலேயே எரிபொருள் கிடைக்கப்பெறுவதால் அன்றையதினமே எரிபொருள் விநியோகத்தை செய்ய முடியாத நிலை காணப்படுகிறது எனினும், அன்றையதினம் எரிபொருள் வரிசையில் நின்றவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு விசேட தொடர் இலக்கங்கள் வழங்கப்பட்டு, அடுத்தநாள் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலும், அந்த நாளுக்குரிய வாகன இறுதி இலக்கங்களுக்குரியவர்களுக்கு அதன் பின்னரும் என எரிபொருள் விநியோகத்தை பிரதேச செயலாளர்கள் மற்றும்உத்தியோகத்தர்கள் ஒழுங்குபடுத்தி வழங்கி வருகிறார்கள்.
இந்த அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வந்து சேர்ந்துவிட்டதாக மாவட்டச் செயலகத்தால் அறிவித்தல் வழங்கப்படும் வரையில் வீணாக வரிசையில் நின்று சிரமங்களுக்கு உள்ளாகவேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.