அரகலய ஆர்ப்பாட்டக்காரர் விமானத்துக்குள் வைத்து கைது (வீடியோ)
தேசிய தொலைக்காட்சிக்குள் அத்துமீறி நுழைந்த அரகலய ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் , இலங்கையை விட்டு டுபாய்க்கு செல்லவிருந்த சமயத்தில் , புலனாய்வு பிரிவினர் விமானத்திற்குள் நுழைந்து கைது செய்தனர்.
அப்போது அங்கிருந்த சிலர் , அவரை கைது செய்ய பயண தடை அல்லது கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு உள்ளதா என புலனாய்வு துறையினரோடு விவாதிப்பதை காண முடிகிறது. அத்தோடு அவர் ஒரு கொலையாளி அல்லது குற்றவாளி அல்ல , உங்களைப் போன்ற மக்களுக்காக போராடியவர். எனவே பயண தடை அல்லது கைது உத்தரவு இருந்தால் இப்படி செய்யலாம் என விவாதத்தில் ஈடுபட்டனர்.
அங்கிருந்து கிடைத்த தகவல்களின்டி அவர் கைதானார் என்றே தெரியவருகிறது. (ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை)
கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, தேசிய தொலைக்காட்சிக்குள் பலவந்தமாக நுழைந்து அதன் நேரடி நிகழ்ச்சிக்கு வந்த இரண்டு செயற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
பிந்திய செய்தி இணைப்பு
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய் செல்ல முற்பட்ட கோட்டகோகம செயற்பாட்டாளரான தனிஷ் அலி கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய தொலைக்காட்சிக்குள் நுழைந்து ஒளிபரப்பை சீர்குலைக்க முயன்றதாக அவர் முன்பு குற்றம் சாட்டப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.