தொண்டைமனாறு ஆலயத்தில் தொற்று நீக்கல்
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கொரோணா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக வல்வெட்டித்துறை நகரசபையின் சுகாதார பிரிவினரால் ஆலய பகுதியில் கிருமித் தொற்று நீக்கம் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.
குறித்த கிருமித் தொற்று நீக்கம் செயற்பாடானது ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களுக்கு இடையூறு இன்றி இரவு வேளைகளில் ஆலயத்தின் உட்புறம் மற்றும்வெளி வீதிகளில் முன்னெடுக்கப்படுகிறது.
வருடாந்த மகோற்சவம் கடந்த 19 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில் தற்போதுநாட்டிலுள்ள கொரோணா தொற்று அச்சம் காரணமாக ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூகஇடை வெளியினை பேணி ஆலய உற்சவத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப் பட்டுகின்றனர்.