ரணில் விரைவில் சீனாவுக்கு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கொஹோன ராய்ட்டர்ஸ் உடனான கலந்துரையாடலில் இது குறித்து சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
வர்த்தக முதலீடு மற்றும் சுற்றுலாத் துறைகளில் சீன அரசு தொடர்ந்து ஆதரவை வழங்குமாறும், தேயிலை, மசாலா பொருட்கள், ஆடைகள் மற்றும் ரத்தினங்கள் போன்ற பொருட்களை வாங்க சீன நிறுவனங்களை ஊக்குவிக்குமாறும் தூதர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒவ்வொரு ராஜபக்ச ஆட்சியின் போதும் இலங்கை வலுவான சீனாவுக்கு ஆதரவான கொள்கையை பின்பற்றியதாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியிலும் அது அப்படியே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.