சகல கலைகளையும் தரும் “சரஸ்வதி கோயில்”
சரஸ்வதிக்கு கோயில் இருப்பது ஆச்சரியமான விசயம்தான் அதுவும் தமிழகத்தில் இருக்கும் ஒரே சரஸ்வதி கோயில் உங்களுக்கு தெரியுமா?
அந்த கோயில்தான் “கூத்தனூர் சரஸ்வதி கோயில்”.குலோத்துங்க மன்னனின் அரசவை புலவர்”ஒட்டக்கூத்தர்”அவர்களுக்கு அவரின் அற்புதமான புலமையை மெச்சி அரசர் ஒரு ஊரை பரிசாக கொடுத்தார் அந்த ஊர்தான் “கூத்தனூர்”(அதாவது கூத்தரின் ஊர்)
*புதிதாக பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும் முன் இந்த கோயிலில் வழிபட்டு சேர்த்தால் சிறப்பான கல்வி கிடைக்கும்.
*இந்த கோயிலின்”சரஸ்வதி அம்மன்”வெண் தாமரையில் அமர்ந்திருப்பது பேரழகு.
*புதிதாக ஏதாவது ஒரு கலைகளை கற்க விரும்புபவர்கள் அல்லது மேற்படிப்பு பயில விரும்புவர்கள் இந்த ஆலயத்தில் வழிபடலாம்.
*நன்றாக படித்த மாணவர் திடீரென்று படிப்பை சரியாக படிக்கவில்லையெனில் இந்த கோயிலில் வழிபட்டால் சரியாகும்.
*பள்ளி மாணவர்கள் தாம் தேர்ச்சி பெறவேண்டும் என்று பிரார்த்தனை செய்து தம் தேர்வு எண்களைக் குறித்து வைப்பதும் உண்டு. கலைமகள் தமக்கு கல்விச்செல்வத்தை வழங்குவாள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது.
*கங்கையும்,காணாமல் போன சரஸ்வதி ஆறும் இணைந்து இங்கு பூமிக்கு கீழ் ஓடுவதாக நம்பிக்கை நிலவுகிறது.
*இந்த கோயில் திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் உள்ளது
அவசியம் இந்த ஆலயத்திற்கு ஒருமுறை சென்று வாருங்கள்,சிறப்பான பலன்கள் கிடைக்கும்.