சிவில் உடையில் வந்த 6 பேர் கோட்டையிலிருந்து பேருந்தில் ஏறிய இளைஞர் கடத்தப்பட்டார்

அந்தரவின் தீவிர உறுப்பினரும் ருஹுனு மகா மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவருமான அன்டனி வெரங்க புஷ்பிக கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்டனி வெரங்க புஷ்பிக, அனிந்தா எனும் பத்திரிகையின் ஊடகவியலாளர் என்றும் கூறப்படுகிறது.
அன்டனி வெரங்க புஷ்பிக என்ற இளைஞன் கோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு திரும்புவதற்காக பேருந்தில் ஏறிய போதே இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் கடத்தப்பட்டது தொடர்பாக நேரில் கண்ட சாட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.