ஆசிரியை ஒருவரின் தங்கச்சங்கிலி மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறிக் கொள்ளையர்களால் கொள்ளை
பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவரின் தங்கச்சங்கிலி மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறிக் கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் அல்வாய், செல்லையா வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
அல்வாய்ப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை பாடசாலை நிறைவடைந்ததன் பின்னர் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரைப் பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவர் ஆசிரியையின் ஒரு பவுண் எடையுடைய தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.