சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு விதித்த கடுமையான நிபந்தனை…..
சீனாவிடம் செலுத்த வேண்டிய சுமார் 6.5 பில்லியன் டொலர் கடனை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை இலங்கை ஆரம்பிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ராய்ட்டர்ஸுக்கு அவர் அளித்த பேட்டியில், சீனா இலங்கைக்கு பெரிய கடன் வழங்குபவர் என்றும், கடன் மறுசீரமைப்புக்காக சீனாவுடன் இலங்கை தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னோக்கி நகர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.