உடன் தேர்தல் வேண்டும்! – தேசப்பிரிய வலியுறுத்து.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டிலும் மக்களால் வழங்கப்பட்ட ஆணை தோல்வியடைந்துள்ளதால், விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி மக்கள் ஆணையைப் பெற வேண்டும் என்று முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“ஜனநாயகத்துக்காக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால், செலவு செய்வதற்கு நிறுவனங்கள் இருக்கின்றன. ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்றவை அதற்குக் உதாரணம்.
தேர்தலை நடத்த ஆயிரத்து 200 கோடி ரூபாய்களே செலவாகும். இத்தொகையை 600 கோடிகளாகச் சுருக்கித் தேர்தலை நடத்தவும் முடியும்.
எந்தவொரு கொடுப்பனவையும் பெறாமல் தேர்தல் கடமையைச் செய்யத் தயார் என அரச அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்துள்ளனர்” – என்றார்.