அவசரகாலச் சட்டத்தை சபையில் எதிர்த்தது ஏன்? – பீரிஸ் விளக்கம்.
“அவசரகாலச் சட்டம் என்பது நாட்டுக்கு அவசியம். அதனை அமுலாக்கும்போது தூரநோக்கு சிந்தனை இருக்க வேண்டும். எனினும், தற்போதைய சூழ்நிலையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.”
– இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் சட்டத்துறை பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் எம்.பி. தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“தற்போதைய சூழ்நிலையில் அவசரகாலச் சட்டம் அவசியமில்லை என்பதாலேயே நாடாளுமன்றத்தில் அதற்கு எதிராக வாக்களித்தேன். அந்தச் சட்டம் வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம்” – என்றும் பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.