கொரோனாவில் இலங்கையில் 12ஆவது மரணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 12 ஆவது நபர் இன்று உயிரிழந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சதரவீர தெரிவித்தார்.

 

உயிரிழந்த நபர் 47 வயது பெண் ஆவார். இவர் கடந்த 20 ஆம் திகதி இந்தியாவில் இருந்து நாடு திரும்பியிருந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண், புற்றுநோய் மற்றும் இருதய நோயாலும் பீடிக்கப்பட்டிருந்தவர் என்றும் இவர் உயிரிழநதமைக்கான காரணம் இருதய பாதிப்பு என அரசாங்க தகவல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.