ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் கிளிக்.. கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த நடிகை ரோஜா!
விஜயவாடாவில் ரோஜா கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில், ஒரே நேரத்தில் 3 ஆயிரம் போட்டோ கிராபர்கள் போட்டோ எடுத்ததால், ‘வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்’ கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார் நடிகை ரோஜா.
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்திலுள்ள நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் நடிகை ரோஜா. மேலும் ஆந்திரா மாநிலத்தின் சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராகவும் உள்ளார்.
இந்நிலையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ரோஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக அமைச்சர் ரோஜாவை ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் போட்டோ எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து அமைச்சர் ரோஜா நிகழ்ச்சி நடந்த தனியார் திருமண மண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ஏறினார். அவரை சுற்றிலும் 3 ஆயிரம் போட்டோகிராபர்கள் நிற்கவைக்கப்பட்டனர். ஒன் கிளிக் ஆன் சேம் டைம் என்ற அர்த்தத்தில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் போட்டோகிராபர்களும் அமைச்சர் ரோஜாவை போட்டோ எடுத்தனர்.
தெலுங்கு பேசும் மாநிலங்களில் உள்ள போட்டோடெக் மற்றும் போட்டோ மற்றும் வீடியோகிராபர் நல சங்கம் நடத்திய இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் ரோஜாவை 3000 புகைப்பட கலைஞர்கள் ஒரே நேரத்தில் புகைப்படம் எடுத்ததன் மூலம், ‘வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்’ கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார் அமைச்சர் ரோஜா.
தெலுங்கு பேசும் மாநிலத்திலுள்ள புகைப்பட கலைஞர்களின் இனம், மதம் என அனைத்து வேறுபாடுகளையும் விடுத்து ஒற்றுமையை குறிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி, சிறிய சிறிய புகைப்பட கலைஞர்கள் என அனைத்து சங்கங்களும் இணைந்து நடத்திய நிகழ்ச்சி என்பது குறிப்பிடதக்கது.