அருட் தந்தை பீரிஸை கைதுக்கு எதிராக 1640 கையெழுத்திட்ட அறிக்கை!
அருட் தந்தை பீரிஸை கைது செய்யும் திட்டம் பற்றி அறிவோம்… 1640 கத்தோலிக்க பாதிரியார்கள் கையெழுத்திட்ட அறிக்கை!
மக்கள் போராட்டத்தில் தீவிரமாகப் பங்காற்றி மக்களுக்குத் தெரிவிக்கும் அருட்தந்தை ஜிவந்த பீரிஸின் கைதுக்கான ஏற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரிவித்து 1640 கத்தோலிக்க குருக்கள், சகோதர, கன்னியாஸ்திரிகளின் கையொப்பத்துடன் கூடிய விசேட அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மக்கள் போராட்டத்தில் தாங்களும் அங்கம் வகிக்கிறோம் என்று கூறும் மதகுருமார், இன்றை தேவை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து ஒடுக்குமுறை நடவடிக்கையை மேற்கொள்வது அல்ல, மக்களின் பிரச்சினைகளை கண்டறிவதே என அந்த அறிவிப்பில் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்ததன் பின்னர் போராட்டங்களின் அடக்குமுறை அதிகரித்ததுடன் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் மூலம் பேச்சு சுதந்திரம் நசுக்கப்பட்டதுடன் தன்னிச்சையான கைதுகளும் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மக்கள் போராட்டத்திற்கு சக குடிமக்கள் மற்றும் பிற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று இந்த அறிவிப்பு மேலும் குறிப்பிடுகிறது.
கத்தோலிக்க மதகுருமார்கள் வெளியிட்ட அறிவிப்பு கீழே உள்ளது.