கோட்டாபய இப்போது வரமாட்டார்! வருவதற்கு இது நல்ல நேரம் அல்ல – ஜனாதிபதி ரணில்!

மக்களால் துரத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கை வருவதற்கு இது சரியான தருணம் அல்ல என தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த தருணத்தில் அவர் நாடு திரும்பினால் அது நாட்டில் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி விரைவில் நாடு திரும்புவார் என்பதற்கான எந்த அறிகுறியும் தமக்கு வழங்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.