கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் கைதான 5 பேர் தொடர்பில் முக்கிய தகவல்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைதான 5 பேர் காணொலி மூலம் நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதி கனியாமூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து மரணமடைந்தார்.
மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு பள்ளியை முற்றையிட்டு பெற்றோர், கிராமத்தினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளர், 2 ஆசிரியைகள் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் சேலம் மத்திய சிறையில் உள்ளனர்.
இந்த நிலையில் ஸ்ரீமதி மரண வழக்கில் கைதான 5 பேர் காணொலி மூலம் நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
அவர்களை அழைத்துச் செல்ல பாதுகாப்புக்கு ஆட்கள் இல்லாததால் காணொலி மூலம் இன்று ஆஜர்படுத்தப்படுகின்றனர்.