அமெரிக்காவுக்கு எதிராக முட்டி மோத தயாராகிறது சீனா !
அமெரிக்காவுக்கு எதிராக சீனா முட்டி மோத தயாராகிறது! தைவான் கடலில் 3 நாள் கடற்படை பயிற்சியை தொடங்கியது சீனா! கடல் எல்லை மூடப்பட்டுள்ளது!
அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் வருகையுடன், சீனாவும் அதற்கு கடுமையாக எதிர்வினையாற்றத் தொடங்கியுள்ளது.
அதன்படி இன்று முதல் 03 நாட்களுக்கு தமது இராணுவம் இராணுவ பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
தைவானின் கடற்பரப்புக்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவப் பயிற்சிகள் காரணமாக அப்பகுதியில் பொதுமக்கள் கப்பல்கள் மற்றும் விமானங்கள் நுழைவதற்கு சீனாவும் தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, சீன வெளிவிவகார அமைச்சு அமெரிக்க தூதுவருக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், சீனாவின் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு பதிலளித்த அமெரிக்கா, அதன் சபாநாயகரின் தைவான் பயணத்தை நெருக்கடியாக மாற்றக்கூடாது என்று கூறியது.
ஆனால் தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாக சீனா கருதுகிறது.