சீனாவின் எதிர்ப்பையும் மீறி, தைவானில் ராணுவ விமானத்தில் தரையிறங்கிய அமெரிக்க சபாநாயகர்!
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு விஜயம் செய்துள்ளார், இது சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு பெரிய இராஜதந்திர நெருக்கடியைத் தூண்டும் அபாயத்தை எழுப்பியுள்ளது .
சுதந்திர நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத தைவானுக்கு அமெரிக்கா அளித்துள்ள மாபெரும் அங்கீகாரம் இது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிபிசியின்படி, தைவானுக்கு வந்த அமெரிக்காவின் உயர்மட்ட ஜனநாயகக் கட்சியின் நான்சி பெலோசி, அந்நாட்டின் உயர்மட்ட பிரதிநிதிகளால் வரவேற்கப்பட்டார்.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் விஜயம், 25 ஆண்டுகளில் நாட்டிற்கு அமெரிக்க அரசியல் தலைமைகள் மேற்கொண்ட மிக உயர்ந்த விஜயமாக பார்க்கப்பட்டது.
இந்த விஜயம் “தைவானில் ஜனநாயகத்தை ஆதரிப்பதில் அமெரிக்காவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மதிக்கிறது” என்றும் “எந்த விதத்திலும் நீண்டகால அமெரிக்க கொள்கைக்கு முரணாக இல்லை” என்றும் பெலோசி கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சபாநாயகர் நான்சி பெலோசி அமெரிக்க ராணுவ விமானத்தில் தைவான் வந்தடைந்தார்.
சீனா உரிமை கோரும் தைவானில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரின் வருகை வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான உறவுகளை நெருக்கடிக்குள் தள்ளும் அபாயத்தை எழுப்பியுள்ளது என்று சர்வதேச விமர்சகர்கள் கூறுகின்றனர்.