அடக்குமுறைக்கு எதிராக மனித உரிமை கண்காணிப்பகம் அறிக்கை!

எதிர் கருத்துக்களைக் கொண்டவர்களை இலங்கை அரசாங்கம் ஒடுக்கத் தொடங்கியுள்ளதாகவும், இந்த நிலைமையை முற்றாகக் கண்டிப்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டின் நெருக்கடிக்கு அரசியல் சீர்திருத்தங்களையும் பொறுப்புக்கூறலையும் கோரிய மக்களை நசுக்குவதற்கு அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் மூலம் நாட்டின் எரியும் பிரச்சினைகளை அரசாங்கம் திசை திருப்பியுள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.