ரணிலை பிடிக்காத மொட்டு எம்பிக்களை வேட்டையாடுவது ஆரம்பம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கருத்து ரீதியாக செயற்படும் அனைத்து மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் நீர்த்து போகச் செய்யும் விசேட நடவடிக்கையொன்று இன்று (03) மாலை பாராளுமன்ற வளாகத்தில் திட்டமிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பொஹொட்டுவ முக்கியஸ்தர்கள் குழு நடத்திய இந்தக் கலந்துரையாடலில், ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக வாக்களித்த எம்.பி.க்கள் அனைவரையும் சகல பதவிகளில் இருந்தும் நீக்கி, கட்சியில் எந்த எதிர்ப்பும் இல்லாத மக்களிடம் பொறுப்புகள் மற்றும் மறுசீரமைப்பை கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இங்கு இலங்கையின் மாவட்ட மட்டத்திலான ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊடாக முன்னெடுக்கப்படும் ஆட்சித் திட்டத்திற்கு உடன்படாத அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் குழுத் தலைவர் பதவிகளில் இருந்து நீக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
இதன் முதற்கட்டமாக கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இருக்கும் வசந்த யாப்பா பண்டாரவை நீக்கி கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷவுக்கு அப்பதவி வழங்குவது பொருத்தமானது என கண்டியின் பலம் வாய்ந்த அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.