உலக பொருளாதார நிலைமையில் இது ஒரு வேண்டாத வேலை என்றுதான் கூறவேண்டும்.
தாய்வான் மீதான சீனாவின் போர் என்பது “அஜெண்டா-2045” இன் ஒரு பகுதி என்பது தெரியும்.நான் எதிர்பார்த்திருந்த ஒரு யுத்தம்தான்.ஆனால் இந்தச்சூழலில் அந்தப்போர் தவிர்க்கப்படவேண்டியது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.
ஏற்கனவே ரஷ்யா உக்ரைன் போரின் எதிரொலி உலகநாடுகளை உலுக்கிக்கொண்டு இருக்கிறது.இந்தநிலையில் தாய்வான் கடற்பரப்பை முற்றுகையிட்டு சீனா மற்றும் அமெரிக்கப்போர்க்கப்பல்கள் நிற்பது என்பது பிராந்தியத்தில் போர்ப்பதற்றத்தை உருவாக்கியுள்ளதை மறுக்கமுடியாது.
அமெரிக்க அதிகாரிகளின் குறிப்பாக சபாநாயகர் நான்சிபொலன்சியின் தாய்வான் பயணத்தை சீனா எதிர்த்ததும் அதையும் மீறி அவர்கள் தாய்வான் வியத்தை மேற்கொண்டதும் கடந்தவாரம் முதலே இந்தப்பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று தாய்வானின் ஜனாதிபதி செயலக இணையத்தளம் மீது சைபர் தாக்குதலை நடத்தி சுமார் 20 நிமிடங்கள் அது முடக்கப்பட்டது.
பல்வேறு வர்த்தகத்தடைகளை தாய்வான் மீது சீனா விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
எவன் சண்டை பிடித்தாலும் எந்த யுத்தம் நடந்தாலும் இலங்கைக்கு சம்பந்தமில்லாமல் எல்லாம் “காதைப்பொத்தி விழும்” உணவு உற்பத்தியை தன்னிறைவாக்கி வைத்துக்கொள்ளுங்கள் மக்காள்….
யுத்தமொன்று வெடித்தால் குறிப்பாக ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, கொழும்பு ஆகிய துறைமுகங்களை அண்டியிருப்போரை கடவுள்தான் காப்பாத்தவேண்டும்…