ரணிலை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு! நிரலை ஆதரிக்க வேலைத்திட்டம் முக்கியம் ! அடக்குமுறையை உடனடியாக நிறுத்துக! (காணொளி)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
முதலில் சர்வகட்சி வேலைத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும், அதன் பின்னர் அதற்கு ஆதரவளிப்பதா என்பதை பரிசீலிக்கலாம் என அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்தார்.
செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துமாறும் ஜனாதிபதியிடம் தமிழ் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.