ஸ்டாலின் குறித்து ரணில் சொன்னதை ஐக்கிய நாடுகள் சபை நினைவூட்டியுள்ளது!
நேற்று (03) கைது செய்யப்பட்ட ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான விசேட செயற்பாட்டாளரான மேரி லோலர் (ஐ.நா. மனித உரிமைகள் பாதுகாப்பாளர்களுக்கான விசேட அறிக்கையாளர்) கருத்து வெளியிட்டுள்ளார்.
பிரபல மனித உரிமைப் பாதுகாவலர் ஜோசப் ஸ்டாலின் மாலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டதாக இலங்கையில் இருந்து கவலையளிக்கும் செய்திகளைக் கேட்டதாக அவர் கூறுகிறார்.
ஜோசப் போன்ற மனித உரிமைப் பாதுகாவலர்களின் பணி சமீபத்திய வாரங்களில் முன்னெப்போதையும் விட முக்கியமானதாகிவிட்டதாகவும், தண்டனையின்றி ஆதரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
ஒரு வருடத்திற்கு முன்னர், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தபோது, ஜோசப் ஸ்டாலினுக்கு எதிராக செயற்பட வேண்டாம் என கோட்டாபய ராஜபக்ச அரசிடம் பாராளுமன்றத்தில் கோரிக்கைவிடுத்திருந்தார்.
ஜோசப் சர்வதேச அளவில் அறியப்பட்ட செயற்பாட்டாளர் என்பதால், அவ்வாறு செய்தால் நாட்டுக்கு கிடைக்கும் உதவிகள் கூட கிடைக்காது என ரணில் விக்கிரமசிங்க , பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது கூறியிருந்தார்.
அன்று ரணில் ….
ස්ටාලින් ගැන රනිල් ගෙන් .. https://t.co/XvL6O2Casb
— Priyanthi (@priyanthim123) August 3, 2022