பாராளுமன்றத்தின் மேல் பறந்த விமானத்தை ஏரியில் தேடும் கடற்படை.
நேற்று (03) பிற்பகல் பாராளுமன்றத்தின் புதிய அமர்வு ஆரம்பிக்கும் போது பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்ட விமானப்படையின் ஆளில்லா விமானம், பாராளுமன்றத்தை அண்மித்த ஏரியான , திவவன்னா ஓயாவில் வீழ்ந்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
விமானத்தை கண்டுபிடிப்பதற்காக கடற்படையின் சுழியோடிகள் குழுவொன்று இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார்.
பிந்திய இணைப்பு
பாராளுமன்ற திறப்பு விழாவின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த வேளையில் திவவன்னா ஓயவில் விழுந்த ஆளில்லா விமானத்தை கடற்படை சுழியோடிகள் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.