ஜனாதிபதியின் திட்டத்துடன் நான் உடன்படுகிறேன்.. அதுவே எனது பார்வையும் கூட..- ஹர்ஷ.
சர்வகட்சி அல்லது இடைக்கால அரசாங்கத்தை , வரையறுக்கப்பட்ட காலத்திற்கு ஸ்தாபிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அப்படிச் செய்தால் புதிய நாட்டைக் கட்டியெழுப்ப முடியும், எதிர்கால சந்ததியினருக்கு நீதியை நிலைநாட்ட முடியும் என்கிறார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தோ-பசுபிக் பொருளாதாரப் பகுதியில் கடல்சார் ஏற்றுமதி செயன்முறையில் கேந்திர நிலையமாக கவனம் செலுத்துவதன் மூலம் போட்டி சமூக சந்தைப் பொருளாதாரமாக இலங்கை உருவாக வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்படும் வேலைத்திட்டத்துடன் தாம் உடன்படுவதாகவும், அதுவே தமது பார்வையும் கூட எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்திட்டத்தை செயல்படுத்த பெரிய சீர்திருத்தங்கள் தேவை என்று கூறும் அவர், பொதுமக்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.