அத்தியாவசிய பொருள்களின் விலைகள் குறைந்தன.

பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலைகள் குறைவடையவுள்ளதாக புறக்கோட்டை வர்த்தக சங்கத்தின் தொழிற்சங்க குழு உறுப்பினர் தேவபுரன் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, 600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட பருப்பு ஒரு கிலோகிராமின் மொத்த விலை 410 ரூபாயாகவும் 330 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சீனி 270 ரூபாயாகவும் கிழங்கு 150 ரூபாயாகவும் வெள்ளைப்பூடு 420 ரூபாயாகவும் 1900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் செத்தல் மிளகாயின் மொத்த விலை 1300 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.