2 மாதங்கள்! 19 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ! 21 பேர் பலி!

கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரை இடம்பெற்ற 19 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளே இந்தச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.