எதிர்வரும் 6 மாதங்கள் மிகவும் கடினமானவை கடந்தே ஆக வேண்டும் என்கிறார் ஜனாதிபதி.
இலங்கையில் அடுத்துவரும் 6 மாதங்கள் ஒருபோதும் அனுபவித்திருக்காத மிகவும் கடினமான காலப்பகுதியாக இருக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
“இந்தக் காலப்பகுதியை கடந்தே ஆக வேண்டும். இதனைக் கடக்க முடியாது என்று திரும்பி வர முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை வெளியிடும் நிகழ்வு இன்று கொழும்பில் நடைபெற்றபோது, அந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போதைய நிலைமையில் சர்வதேச நாணய நிதியதத்துடன் தேவையான ஒப்பந்தங்களைச் செய்து இணக்கப்பாடுகளை எட்டிப் பயணிப்பதைத் தவிர மாற்று வழிகள் இருப்பதாக நான் கருதவில்லை.
பொருளாதர நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காகப் பல்வேறு வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். எனினும், அடுத்து வரும் 6 மாதங்கள் கடினமானவை. அதனைக் கடந்தே ஆகவேண்டியுள்ளது. கடக்க முடியாது என்று திரும்பி வர முடியாத நிலைமையே காணப்படுகின்றது” – என்றார்.