கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்!

வத்தளையில் ஆண் ஒருவரின் உடலம் கரையொதுங்கியுள்ளது.
வத்தளை, டிக்கோவிட்ட கடற்கரையிலேயே இந்தச் சடலம் கரையொதுங்கியுள்ளது என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
35 இற்கும் 40 இற்கும் இடைப்பட்ட வயதானவராக இருக்கலாம் என்று நம்பப்படும் இந்த ஆணின் கைகள் இரண்டும், கால்கள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் இருக்கின்றன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.