மஸ்கட்டில் சிக்கித்தவிக்கும் குமரி மீனவர்கள்.. மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட்டில் சிக்கித்தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 8 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களின் விசா காலாவதியானதாலும், ஓமன் நாட்டவரால் அவர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்படாததாலும் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிப்பதை குறிப்பிட்டுள்ளார்.
மீனவர்களின் அவலநிலையைக் குறிப்பிட்டு, அவர்களை மஸ்கட்டிலிருந்து திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்தி, தூதரக அளவில் தேவையான அனைத்து உதவிகளை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் வாயிலாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை கேட்டுக்கொண்டுள்ளார்.