கம்பஹா கெஹல்பத்தரவில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை!

கம்பஹா கெஹல்பத்தர பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
22 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், அவர் முடி வெட்டும் இடத்தில் இருந்த போது துப்பாக்கிதாரி ஒருவர் வந்து சுட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.