அடையாளம் தவறியது… அப்பாவி இளைஞன் சுடப்பட்டு பலி!
கெஹல்பத்தர பிரதேசத்தில் இன்று சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் , ஒரு அப்பாவி எனவும் , எந்தவொரு தவறான செயலிலும் ஈடுபடாதவர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன் , கொலையாளியின் தவறான அடையாளப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
பஸ்பொட்டா என்ற பாதாள உலக குற்றவாளியை கொல்ல திட்டமிட்டு , துபாயில் தங்கியிருக்கும் பத்மே என்ற நபரின் நெருங்கிய சாகாவை கொலை செய்ய இந்த கூலி கொலையாளி வந்துள்ளார்.
அந்த நபர் கொலை செய்யப்பட்ட இளைஞரைப் போலவே கையில் பச்சை குத்தியுள்ளார். கொலை செய்யப்பட்ட இளைஞரின் கையிலும் பச்சை குத்தப்பட்டிருந்தது. துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் தேடி வந்த இளைஞனும் இலக்கு வைக்கப்பட்ட நபரும் சற்று முன்னர் தாக்குதல் நடத்தப்பட்ட சலூனுக்கு அருகிலேயே தங்கியிருந்த நிலையில், கொலையாளி வருவதற்கு சற்று முன்னர் இலக்கு வைக்கப்பட்ட நபர் அந்த இடத்தை விட்டுச் சென்றுள்ளார்.
பச்சை குத்தியிருந்தார் என தவறாக அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் , கொல்லப்பட்ட இளைஞனைக் கொன்றுவிட்டு சுட்டவர் தப்பித்துள்ளார்.
22 வயதான இளைஞரே கொல்லப்பட்டுள்ளார்.
கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.