காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 24 பேர் பலி.
பாலஸ்தீனின் காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. ஜெருசலேம், பாலஸ்தீனின் காசா பகுதி இஸ்ரேல் தாக்குதலால் தொடர்ந்து கடுமையான பாதிப்புகளையும் உயிர்பலிகளையும் சந்தித்து வருவதாக அறிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பாலஸ்தீனின் அல்-குத்ஸ் படைப்பிரிவுடைய தளபதி அல்-ஜபரி காசாவில் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.
பாலஸ்தீன் காசா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பாலஸ்தீன போராளி குழுவின் உயர்மட்ட தளபதி உட்பட குறைந்தபட்சம் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 215 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஓர் ஐந்து வயது பெண் குழந்தை உட்பட 6 குழந்தைகளும் அடக்கம் என்றும் பலர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுவரை நடந்த தாக்குதல் சம்பவங்களில் 215 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத்தின் உறுப்பினர்களில் ஒருவரை இந்த வாரத் தொடக்கத்தில் கைது செய்த பிறகு, அந்த அமைப்பின் அச்சுறுத்தல் வந்ததைத் தொடர்ந்து இந்த ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.