பேச்சுவார்த்தைக்கு முன் கஜேந்திரனிடமிருந்து ஜனாதிபதிக்கு 2 நிபந்தனைகள்!
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லிங் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சகல செயற்பாட்டாளர்களும் விடுதலை செய்யப்பட்டு தற்போதைய அவசரகாலச் சட்டம் முற்றாக நீக்கப்படும் வரை ஜனாதிபதியுடன் எவ்வித கலந்துரையாடலிலும் ஈடுபடப் போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. .
அது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இது குறித்து எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கப்படும் என்றார் அவர்.
எதிர்வரும் 10ஆம் திகதி பிற்பகல் சர்வகட்சி ஆட்சி அமைப்பது தொடர்பில் கலந்துரையாட வருமாறு ஜனாதிபதி கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் பதவியை வகித்த போது காலிமுகத்திடல் போராட்டம் தொடர வேண்டும் எனக் கூறிவிட்டு , பதவியேற்றதன் பின்னர் அதை மறந்து , அப் போராட்டத்தை நசுக்கிய விதத்தை , ஏற்க முடியாது என கஜேந்திர குமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.