போராட்டம் சட்ட விரோதமானதென்றால் , போராட்டத்தால் கிடைத்த பதவியும் சட்ட விரோதமானது ! – ரவி குமுதேஷ் (VIDEO)
போராட்டத்தின் போது செய்தவை அனைத்தும் சட்டவிரோதமானவை என்றால், ரணில் விக்கிரமசிங்க போராட்டத்தின் மூலம் பதவிக்கு வந்ததும் சட்டவிரோதமானது என தொழிற்சங்கத் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்களை ஒடுக்குவதை புறந்தள்ளிவிட்டு நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி முன்வைக்க வேண்டுமென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.