அம்பாறை மத்திய முகாமில் நூறு நாள் உரிமைப் போராட்டம்!

அரசியல் தீர்வு வேண்டி வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நூறு நாள் செயல்முனைவின் ஏழாவது நாள் போராட்டம் அம்பாறை மத்திய முகாமில் இன்று நடைபெற்றது.
‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ என்ற தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
சுமார் 200 இற்கும் மேற்பட்ட பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், கிராம அபிவிருத்தி சங்கங்களைச் சேர்ந்தவர்கள், விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், இளைஞர் விளையாட்டுக் கழகத்தினர் எனப் பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.