நாய்க்கடிக்கு இலக்காகி யாழ் போதனா வைத்தியசாலையில் இருவர் மரணம்
மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த விசர்நாய் கடிக்கு இலக்கான இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவங்களில் மன்னார் தாழ்வுப்பாட்டைச் சேர்ந்த ஜெபநேசன் பிரிறாடோ – கொன்சடீயா வயது 39 என்னும் இரு பிள்ளைகளின் தாயாரும் , சங்கரத்தை , வட்டுக்கோட்டையைச் சேர்ந்த தவச்செல்வன் – தர்சன் என்னும் 15 வயதினையுடைய மாணவனுமே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
மன்னாரில் கடந்த யூலை மாதம் 13ம் திகதி ஜெபநேசன் பிரிறாடோ – கொன்சடீயாவும் மகனுக்கும் நாய் கடித்த போது் மகனிற்கு தடுப்பூசி போட்ட தாயார் தனக்கு தடுப்பூசி ஏற்றத் தவறிவிட்டார். இதனால் கடந்த 21ம் திகதி அதிகாலை 3 மணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதனால் மன்னார் வைத்தியசாலையில் அனுமதி்க்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று மதியம் உயிரிழந்தார்.
இதேபோன்று துனைவி சங்கரத்தை , வட்டுக்கோட்டையைச் சேர்ந்த தவச்செல்வன் – தர்சனிற்கும் அண்மையில் ஓர் நாய் கடித்துள்ளது. அவ்வாறு நாய் கடிக்கு இலக்காண மாணவன் நேற்று மாலை நெஞ்சு விலிப்பாத கூறியதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் அதிகாலை 12 மணி தாண்டி மயக்கம் உற்றுள்ளார்.
மயக்கம் உற்ற சிறுவனிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் அதிகாலை 2.30 மணியளவில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த இரு மரணங்கள் தொடர்பிலும் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.