ஊழலற்ற செயற்பாடுகளே நாட்டிற்கு அவசியம் – பஸில்
வீண் விரயம் மற்றும் ஊழலை தவிர்த்து சிறந்த செயல்திறன்மிக்க பெறுகை செயற்பாடுகள் நாட்டிற்கு அவசியம் என்று பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமை ஒழிப்பு சம்பந்தமான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரலி மாளிகையில் இலங்கை கணக்காளர்கள் சேவை சங்கத்தினருடன் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
நிறுவனத்தின் தலைமைத்துவம் மாற்றமடைந்த போதிலும் நிலையான அபிவிருத்திக்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடைமுறையில் மாற்றம் அவசியம்
சமுகப் பொருளாதார அழுத்தங்களை ஆராயும் நடைமுறைக்கு அமைவாக அரச நிர்வாகம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் அதற்காக தொழில்வாய்ப்புளை ஏற்படுத்தல், வருமானத்தை அதிகரித்ல், ஏற்றுமதியை விருத்தி செய்தல் உள்ளிட்ட பொருளாதார சமுக அபிவருத்தி இலக்குகளைக் கொண்ட அபிவிருத்தி திட்டங்களை வகுக்க வேண்டும். எனவும் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமை ஒழிப்பு சம்பந்தமான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.