யாழில் ஹயஸ் மோதி இளைஞர் சாவு!

யாழ்., தென்மராட்சி, சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சாவடைந்துள்ளார். அத்துடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
சாவகச்சேரி நகர் பகுதியில் இருந்து நுணாவில் நோக்கி ஏ – 9 வீதி ஊடாக சைக்கிளில் பயணித்த இளைஞர்களை அதே திசையில் பின்னால் வந்த ஹயஸ் வாகனம் மோதி விட்டு தப்பித்துச் சென்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் மறவன்புலோ பகுதியைச் சேர்ந்த 26 வயதான க. நிசாந்தன் என்பவர் விபத்தில் சிக்கி பலியானதுடன், அவருடன் பயணித்த மட்டுவில் தெற்கு பகுதியைச் சேர்ந்த 29 வயதான தி.பார்த்தீபன் என்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.