பேச்சுக்குச் செல்வோம்; சர்வகட்சி அரசில் இணையமாட்டோம்! – ஜே.வி.பி. திட்டவட்டமாக அறிவிப்பு.

“சர்வகட்சி அரசில் ஜே.வி.பி.தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இணையாது” – என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மைப் பேச்சுக்கு அழைத்துள்ளார். நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் அவரின் அழைப்பை ஏற்று சந்திப்புக்குச் செல்வோம். ஆனால், சர்வகட்சி அரசில் இணையமாட்டோம் என்ற விடயத்தைத் தெளிவாகக் குறிப்பிடுவோம்.
தேர்தலை நடத்தாமல், ஆட்சியைத் தக்கவைக்கவும், தொடரவுமே இந்தச் சர்வகட்சி அரசு முயற்சி இடம்பெறுகின்றது. மாறாக அதில் மக்கள் நலன் இல்லை” – என்றார்.