இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் நிறுத்த ஒப்பந்தம்.
இஸ்ரேல் – பாலஸ்தீன இஸ்லாமிய குழுக்களுக்கு இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது.
கடந்த மூன்று நாட்களாக கடும் சண்டை நடந்தது. இருதரப்பினரும் ஏவுகணைகள், போர் விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர்.
சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 15 குழந்தைகள், நான்கு பெண்கள் உள்ளிட்ட 43 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்; ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் இருதரப்புக்கும் இடையே நேற்று முன் தினம் இரவு பேச்சு தொடங்கி, நேற்று அதிகாலையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் தாக்குதலை நிறுத்தியுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.