ரூ.1.62 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களை நடப்பாண்டில் தனியாருக்கு வழங்க திட்டம்- மத்திய அரசு தகவல்

மத்திய அரசின் சொத்துகளை பணமாக்கும் திட்டத்தின் படி, நடப்பாண்டில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் தனியாருக்கு வழங்க இலக்கு நிர்ணயித்து உள்ளதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்றைய கூட்டத்தின்போது கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டில் 97 ஆயிரம் கோடி சொத்துக்கள் பணமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மத்திய அரசு அறிவித்த படி 2025 ஆம் ஆண்டுக்குள் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு சொத்துகள் தனியாருக்கு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நடப்பு நிதியாண்டில் 1,62,422 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பணமாக்கப்படும் என்று தெரிவித்த அவர், 2021-22 நிதியாண்டில், முக்கிய பரிவர்த்தனைகளில் நெடுஞ்சாலை டோல்-ஆப்பரேட்-ட்ரான்ஸ்ஃபர் (TOT) அடிப்படையிலான PPP சலுகைகள், NHAI இன் உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை (InvIT), PowerGrid InvIT, FY21-22 இல் தனியார் ஏலம் விடப்பட்ட கனிம மற்றும் நிலக்கரித் தொகுதிகளின் வருடாந்திர வருவாய் ஆகியவை அடங்கும். ரயில்வே காலனிகளின் மறுமேம்பாட்டிற்கான தனியார் முதலீடு ஆகியவை இதில் அடங்கும் என கூறினார்.