கப்பல் பிரச்சனையால் இலங்கை மேல் சினம் கொண்ட சீனா , பழிக்கு பழி ?
கப்பலின் வருகையை இலங்கை தடுக்க முயன்றதால் , சினம் கொண்ட சீனா , இலங்கையிடம் பழிக்கு பழி வாங்கத் தொடங்கியுள்ளது ! இலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைக்க முயல்கிறது! இலங்கை சம்பந்தமான அனைத்து முயற்சவகளையும் தடுக்க ஆரம்பித்துள்ளது! இலங்கை பொருட்களை வாங்குவதில் தாமத போக்கை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது!
சீனக் கப்பலின் விஜயத்தை இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததையடுத்து, சீனாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விளம்பர நிகழ்ச்சி ஒன்று சீனாவிலுள்ள அனைத்து சமூக ஊடக வலையமைப்புகளிலும் விளம்பரப்படுத்தப்படுவதிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பிரச்சாரத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ‘Douyin’ இல் முன்னெடுக்க இலங்கை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆனால் அதனை நடைமுறைப்படுத்த முடியாது என இலங்கை தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஆட்சேபனைக்குப் பிறகு யுவான் வாங் 5 என்ற ஆராய்ச்சிக் கப்பலின் துறைமுக அழைப்பை இலங்கை ஒத்திவைத்ததற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இதனைச் செய்துள்ளதாக இலங்கை அதிகாரிகள் நம்புகின்றனர்.
அத்துடன், சீனாவில் உள்ள பல சமூக ஊடக இணையத்தளங்கள் , இலங்கை தொடர்பில் எதிர்மறையான செய்திகளை வெளியிட்டுள்ளதாக உயர்தர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் சில சீன பல்பொருள் அங்காடிகள் இலங்கையில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்வதை தாமதப்படுத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.