குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை! – சந்தேகநபர் தப்பியோட்டம்.

தனிப்பட்ட தகராறு காரணமாகக் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவின் கலஹபிடிய பிரதேசத்தில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் வெட்டுக் காயங்களுக்குள்ளான குறித்த நபர் மினுவாங்கொடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
58 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலை செய்யப்பட்டவர் மற்றும் சந்தேகநபருக்கு இடையில் காணப்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். எனினும், அவர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார் என்று விசாரணைகளை மேற்கொண்டு வரும் கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.